தொழில் இழக்கவுள்ள 6 ஆயிரம் பேர் – அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை விரைந்து மறுசீரமைக்க தவறினால் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் 6 ஆயிரம் பேர் தொழிலை இழக்க நேரிடும் என துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

தொடர்ச்சியாக நட்டத்தில் இயங்கும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை அரசாங்கத்தால் தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாதெனவும், மக்கள் பணத்தை வீணடிக்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைக்கும் பணிகளுக்கு சர்வதேச நிதி செயற்பாடுகள் தொடர்பில் நிபுணத்துவம் பெற்றவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படும் என்றும் மிகவும் வெளிப்படைத் தன்மை மிக்கதாக அந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Share this Article