தொழிலுக்கு சென்றவரை காணவில்லை

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மேற்கு பனங்கானி கரையில் தொழிலுக்கு சென்ற நெடுந்தீவு 08ம் வட்டாரத்தினை சேர்ந்த சில்வெஸ்ரர் மரியதாஸ் (வயது 65) எனபவர் இது வரை காணாமையினால் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

காலை 07.30 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு பனங்காணி துறைக்கு சென்று கட்டுமரம் மூலம் தொழிலுக்கு (நண்டு வலை) சென்றுள்ளதாகவும் தொழிலுக்கு புறப்பட்ட இடத்தில் இவரது துவிச்சக்கர வண்டி காணப்படுகின்றது. மாலை ஆகியும் வீடு திரும்பாத காரணத்தினால் தற்போது இவரை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடற்படையினர் மற்றும் உரியவர்களுக்கு உரிய முறையில் தகவல்கள் பரிமாறப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Share this Article