தேசபந்துவின் வெளிநாட்டுப் பயணத்தடை நீக்கம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது.

காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட அரகலய போராட்டத்தின்போது, போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளைக் கருத்திற்கொண்டே அவருக்கு நாட்டைவிட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்தத் தடையுத்தரவை நேற்று நீக்கியுள்ளது.

Share this Article