துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு வவுனியாவில் அஞ்சலி!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

துருக்கி மற்றும் சிரியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு வவுனியாவில் நேற்று (பெப்ரவரி 11) அஞ்சலி செலுத்தப்பட்டது.

வவுனியா வாடிவீட்டு மண்டபத்தில் தமிழ் விருட்சத்தின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், உயிரிழந்த பொதுமக்களின் நினைவாக அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் எம்.ஜி,ஆர் நற்பணிமன்றத்தின் தலைவர் கோ.சிறிஸ்கந்தராஜா, முன்னாள் நகரசபை உறுப்பினர்களான ரி.கே.ராஜலிங்கம், சு.குமாரசாமி, சமூகஆர்வலர்கள்,அரசியல் தரப்பினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Share this Article