துணுக்காய் கல்வி வலைய மாணவர்களுக்கு மாபெரும் கருத்தரங்கு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்தால் நேற்று (மே 3) துணுக்காய் கல்வி வலையத்துக்குட்பட்ட க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான மாபெரும் கருத்தரங்குகள் இடம்பெற்றது.

இந்த நிகழ்வுகளில் துணுக்காய் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சாமுவேல் பிரதீவானந் மற்றும் வவுனியா பாவற்குளம் கனிஸ்ர உயர்தர வித்தியாலயத்தின் அதிபர் செ.ஐனந்தன் அவர்களும் கலந்துகொண்டனர்.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மாவித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் 150 மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

குறித்த கருத்தரங்கில் ஆங்கிலத் துறை வளவாளராக சி.திருவருட்செல்வன் மற்றும் (வ/நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயம்) வரலாற்றுத் துறை வளவாளராக திரு.அ.வினோத் (வ/பாவற்குளம் கனிஸ்ர உயர்தர வித்தியாலயம்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Share this Article