தீவகத்தில் கொரோனா அச்சம் நெடுந்தீவில் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வேலணை புங்குடுதீவு பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் அப்பிரதேசத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் காரணமாக இன்றைய தினம் காலையில் தீவகத்திற்கான பஸ் போக்கவரத்து தடைப்பட்டதால் நெடுந்தீவில் இருந்து காலையில் குறிகட்டுவான் துறைமுகம் நோக்கி வந்த குமுதினிப்படகு மீளவும் திரும்பி நெடுந்தீவிற்கு சென்றுள்ளதுடன் குமுதினிப்படகின் பின்னர் புறப்பட்ட தனியார் போக்குவரத்து படகும் நடுக்கடலில் போக்குவரத்து வசதிகள் இன்மை என்ற தகவலைத் தொடர்ந்து மீளம் நெடுந்தீவு இறங்கு துறைமுகத்தினை சென்றடைந்தது.

புங்குடுதீவு மடத்துவெளிப்பகுதியில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையில் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் போக்குவரத்தில் ஈடுபடும் மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தேவையேற்படின் தீவகங்களுக்கான போக்குவரத்து தடைப்படக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் கடமையில் உள்ள சுகாதாரப்பணிமனை உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this Article