தீப்பிடித்து எரிந்த வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வவுனியாவில் தீ பிடித்து எரிந்த வீட்டினுள் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா – தேக்கவத்தைப் பகுதியிலுள்ள வீடொன்று தீ பிடித்து எரிகின்றது என இன்று(ஜூன் 21) காலை வவுனியா பொலிஸாருக்கும் மாநகர சபை தீயணைப்புப் பிரிவுக்கும் அயலவர்களால் தகவல் வழங்கப்பட்டது.

அதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் மற்றும் பொலிஸார் வீட்டில் பரவிய தீயை அணைத்துள்ளே சென்ற போது, அறை ஒன்றினுள் வீட்டில் வசித்த குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டார்.

சடலத்தை மீட்ட பொலிஸார், உடற்கூற்றுப் பரிசோதனைக்காகச் சடலத்தை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article