திருக்கேதீச்சரத்தில் சிறப்புற்ற சிவராத்திரி!- 6 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

மிகவும் பழமையானதும் பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீச்சரத்தின் சிவராத்திரி திருவிழா ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களின் வருகையோடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

மகா சிவராத்திரி திருவிழா நேற்று (பெப்ரவரி 18) சனிக்கிழமை காலை 5 மணிக்கு விசேட பூசை வழிபாடுகள், அபிஷேகங்களுடன் ஆரம்பமாகியது.

பாவங்கள் போக்கும் பாலாவியில் நீராடி ஈசனுக்குத் தீர்த்தம் எடுப்பதற்காக நாட்டின் பல பாகங்களிலும் இருந்து ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொணடார்கள். காலை 8 மணி தொடக்கம் மகாலிங்கப் பெருமானுக்கு தீர்த்தக் காவடி எடுக்கப்ட்டது.

மாலை 3 மணி முதல் விசேட அபிசேகமும் மாலை 4.30 மணிக்கு மகா பிரதோஷகால பூசையும் அதைத் தொடர்ந்து ஆறு சாமப் பூசை அபிஷேகங்களும் அர்ச்சனை வழிபாடுகளும் நடைபெற்றன.

விசேட வசந்த மண்டப அலங்கார பூஜையைத் தொடர்ந்து பாலாவியில் எழுந்தருளி இருக்கும் ஈசனுக்கு தீர்த்த உற்சவம் நடைபெற்றது.

அடியார்களுக்கு அன்னதானம், தாகசாந்தி என்பன வழங்கப்பட்டதுடன், விசேட நிகழ்வுகளாக சிறப்புச் சமயச் சொற்பொழிவுகள், கலை நிகழ்வுகள், பாராயணம் ஓதுதல் போன்றவையும் இடம் பெற்றன.

Share this Article