தமிழா் பண்பாட்டு விழா மிகவும் சிறப்புற இடம் பெற்றது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கடனா அமைப்பின் நிதி அனுசரணையுடன் நெடுந்தீவு பிரதேச இளைஞா் சம்மேளனம் ஏற்பாட்டில் தமிழா் பண்பாட்டு திருவிழா மிகவும் சிறப்பா கடந்த 13ம் திகதி (பெப்ரவாி 13) நெடுந்தீவில் இடம் பெற்றது.

காலையில் விழாவினை சிறப்பிக்கும் முகமாக குதிரையோட்டம், வீதியோட்டம் சைக்கிள் ஓட்டம், போன்ற நிகழ்வுகளும் அதனைத் தொடா்ந்து மைதானத்திலே கரப்பந்தாட்டம், கிடுகு பின்னுதல், நீத்துப் பெட்டி இளைத்தல் தேங்காய் துருவுதல், போன்ற போட்டிகள் இடம் பெற்றன.

அதனைத் தொடா்ந்து மாலை பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக இடம் பெற்றது இந் நிகழ்வில் அரச திணைக்களங்கள் சமூக மட்ட அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டு பொங்கல் நிகழ்வினை சிறப்பித்தனா்.

இரவு நிகழ்வாக கலை நிகழ்வுகளும் கௌவிப்பு நிகழ்வுகள், பாிசில் வழங்கல் என்பன இடம் பெற்றன இந் நிகழ்வில் பிரதேச செயலாளா், கோட்டக்கல்வி அதிகாாி, பாடசாலை அதிபா்கள், மற்றும் பலா் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.

Share this Article