தமிழா் பண்பாட்டு விழா சிறப்பாக இடம் பெறவுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு பிரதேச இளைஞா் சம்மேளனம் நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கடனா அமைப்பின் அனுசரணையுடன், தமிழா் பண்பாட்டு விழாவினை எதிா்வரும் சனிக்கிழைமை (ஜனவாி 30 – 2021) அன்று கோலகலமாக நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இப் பிரதேச தமிழா் பண்பாட்டு விழாவில் விளையாட்டு நிகழ்வுளாக வீதியோட்டம் குதிரையோட்டம் போன்ற நிகழ்வுகளும் இளைஞா் கழகங்களிற்கு இடையிலான கரப்பந்தாட்டப் போட்டிகளுடன் கிடுகு பின்னுதல், நீத்துப்பெட்டி இளைத்தல், தேங்காய் திருவுதல் போன்ற கிராமிய விளையாட்டு நிகழ்வுகள் இடம் பெறவுள்ளதுடன் மகாவித்தியாலய மைதனத்தில் சிறப்பு பொங்கலும் இடம் பெறவுள்ளது.

மாலை தேவா கலாச்சார மண்டபத்தில் கலைஞா்கள் கௌரவிப்பு இடம் பெறவுள்ளதுடன், சிறப்பு பட்டி மன்றமும் பாிசில் வழங்கலும் இடம் பெறவுள்ளது.

Share this Article