தபால் மூலம் வாக்களிக்க 7 இலட்சம் பேர் விண்ணப்பம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ம சுமார் 700,000 தபால் மூல வாக்குவிண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியுள்ளநபர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது மார்ச் 3 ஆம் திகதிஆரம்பிக்கப்பட்டதுடன் கடந்த 17 ஆம் திகதி நிறைவடைந்தது.

இதற்கிடையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகளுக்கான அரசுஅதிகாரிகள் குறித்த தகவல் கணக்கெடுப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகதேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, எந்தவொரு அரச அதிகாரியும் இன்று வரை தங்கள் தகவல்களைவழங்கவில்லை என்றால், அந்தத் தகவலை சம்பந்தப்பட்ட அதிகாரியின்அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்தின் மாவட்டத் தேர்தல் அலுவலகத்திற்கு, அவர்களின் நிறுவனத் தலைவரின் பரிந்துரைகளுடன் அனுப்புமாறு தேர்தல்ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கோரியுள்ளார்.

Share this Article