தனியார் கல்வி நிலைய நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பணிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தனியார் கல்வி நிலைய நிர்வாகிகளுடளுடனான விசேட கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் 133 தனியார் கல்வி நிலையங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பதிவு செய்யப்படாத தனியார் கல்வி நிறுவனங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், ஞாயிற்றுக் கிழமைகளில் தனியார் வகுப்புக்களை 12 மணிக்கு முன்னர் நடத்தக் கூடாது என்றும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

மேலதிக மாவட்டச் செயலர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், கல்வி நிலையங்களின் நிர்வாகிகள், பொலிசார், சுகாதார உத்தியோகத்தர்கள் உட்படப் பலர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Share this Article