டெங்குத் தொற்றின் புதிய பிறழ்வால் ஆபத்து!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நாட்டில் பரவி வரும் புதிய டெங்கு பிறழ்வால், எதிர்காலத்தில் டெங்குத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென வைத்தியர் சந்திம ஜீவந்த தெரிவித்தார்.

இதேவேளை, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகமும் சிறுவர்களுக்கான டெங்குத் தொற்று எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது.

எதிர்காலத்தில் டெங்கு தொற்றுக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டால் இந்தத் தகவல்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

இதேவேளை, மேல் மாகாணத்தில் அதிகரித்து வரும் டெங்குத் தொற்றாளர்களை கட்டுப்படுத்த டெங்கு செயலணியை செயற்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

Share this Article