ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் ஜனக!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க 2024 ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்று கூறப்படுகின்றது.

கடந்த காலங்களில் அவர் பேசு பொருளாகத் திகழ்ந்தவர். மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராகவும் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக மின் வெட்டை நிறுத்த வேண்டும் என்று அவர் மக்கள் பக்கம் நின்று செயற்பட்டிருந்தார்.

அதற்காக அவருக்கு எதிராக அரசாங்கத்தால் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன என்று கூறப்படுகின்றது. இந்தநிலையில், அவர் 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Article