சேவியர் கருணாரட்ணத்தின் 15 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சேவியர் கருணாரட்ணம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு இன்று (ஏப்ரல் 20) வவுனிக்குளம் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் நடைபெற்றது.

யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் தொடர்ந்து அடிகளாரின் கல்லறைக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டு மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Share this Article