சுதந்திர தின மேடையை வீடியோ எடுத்தவர்கள் கைது!!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

75 ஆவது சுதந்திர தினத்துக்காக கொழும்பு காலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மேடை உட்பட ஏனைய முக்கிய இடங்களை வீடியோவில் பதிவு செய்து கொண்டிருந்த காலி முகத்திடல் போராட்ட செயற்பாட்டாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

காலி முகத்திடலில் போராட்டம் நடத்திய ஒரு ஆணும் பெண்ணும் நேற்று முன்தினம் (ஜனவரி 30) இரவு 8.00 மணியளவில், அத்துமீறி சுதந்திர தின மேடையை வீடியோவில் பதிவு செய்து கொண்டிருந்தபோது பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் இருவரும் கொழும்பு மற்றும் காலி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் இருவரும் பொலிஸ் பினையில் விடுவிக்கப்பட்டனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share this Article