சீனி மற்றும் பால்மா விலையை குறைத்தது சதொச நிறுவனம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

லங்கா சதொச நிறுவனம் சீனி மற்றும் பால்மா ஆகிய நுகர்வுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதனை இன்று (15) முதல் அமுலாகும் வகையில் 243 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 400 கிராம் பால் மாவின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1080 ரூபாவாகும்.

Share this Article