சிறுவர் தின நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சிறுவர் தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் (ஒக்டோபர் 01) அனைத்திற்கும் முன்னுரிமை சிறுவர்கள் எனும் தொனிப்பொருளில் பட்டினி அற்ற மரங்கள் நிறைந்த தார்மிக நாடொன்றைக் கட்டியெழுப்பும் சிறுவர் சுற்றாடல் பாதுகாப்பு படையணியை ஸ்தாபித்தல் மற்றும் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடும் வேலைத்திட்டம் நெடுந்தீவில் பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திரு.எவ்.சி.சத்தியசோதி அவர்களது தலமையில் இடம் பெற்றது.

சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தரது ஏற்பாட்டில் நன்டத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையில் 100 பலாமரக்கன்றுகள் நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிறுவர் கழகங்களுக்கு வழங்கப்பட்டதுடன் பாடசாலை கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது.

கணபதிப்பிள்ளை இலட்சுமி அவர்களது ஞாபகர்தமாக அவர்களது குடும்ப அங்கத்தவர்களால் ரூபாய் 25,000.00 பெறுமதியான பலா மரக்கன்றுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article