சிறப்புடன் இடம்பெற்ற கற்கடதீவு அந்தோனியார் திருநாள் திருவிழா!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கற்கடதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவில் இன்றையதினம் (மார்ச் 29) சனிக்கிழமை காலை 06:30 மணிக்குதிருச்செபமாலையுடன் ஆரம்பமாகிய திருவிழா திருப்பலியானது புனிதரின்திருச்சுரூப பவனி மற்றும் திருச்சுருப ஆசீருடன் நிறைவடைந்துள்ளது.

இப்பெருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் துறவறசபையின் மலரும்முல்லை அமையத்தின் இயக்குனர் அருட்பணி ஜீவரட்ணம் அடிகளார்ஒப்புக்கொடுத்து செபித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கற்கடதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவானது நெடுந்தீவுபங்குத்தந்தை அருட்பணி ப.பத்திநாதன் அடிகளாரின் நெறிப்படுத்தலில் கடந்த 03 தினங்களாக இடம்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Share this Article