சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு முனியப்பர் ஆலய திருக்குளிர்த்தி விழா.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு தென்கிழக்கில் அமைந்துள்ள அருள்மிகு முனியப்பர் ஆலயத்தின் வருடாந்த மகா திருக்குளிர்த்தி விழா நேற்றையதினம் திங்கட்கிழமை (ஜூலை 21) மாலை ஆரம்பமாகி பக்திபூர்வமாக சிறப்புடன் இடம்பெற்று இன்று (ஜூலை 22) காலை நிறைவடைந்தது.

திருக்குளிர்த்தியை சிறப்பிக்கும்வகையில் நேற்றையதினம் திங்கட்கிழமை (ஜூலை 21) மாலை  ஆலயத்தை அண்மித்த பகுதியில் உள்ள குயிந்தா சவாரித்திடலில் மாட்டுவண்டில் சவாரி சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். 



அதனைத் தொடர்ந்து கலைநிகழ்வுகள் , அன்னதானம்,திருக்குளிர்த்தி விழா, பொங்கல் விழா, மடைபரவல் ,சுவாமி வீதியுலா மற்றும் தீமிதிப்பு என்பவற்றுடன் நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசில் வழங்கல், மற்றும் ஏலவிற்பனை என்பன இடம்பெற்றமை சிறப்பாகும்.

Share this Article