சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு தெக்காட்டு அம்மன் வருடாந்த பொங்கல் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு தெக்காட்டு முத்துமாரி அம்மன் கோவில் வருடாந்த பொங்கல்  திருவிழா – 2025  சிறப்பாக நடைபெற்று முடிவுக்கு வந்துள்ளது.

நேற்றையதினம் (ஜூலை 10) மாலை பொங்கல் வழிபாடுகள் ஆரம்பமாகி இடம்பெற்றதுடன் , சிறப்பு பூசை வழிபாடுகளும்  இன்று (ஜூலை 11) காலை வரை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

பெருமளவு பக்தர்கள் தங்களின் நேரத்திக் கடன்களை தீர்க்க பொங்கல் வைத்து வேண்டுதல் செய்ததுடன் , அங்கப்பிரிதிஷ்டையும் செய்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை முத்துமாரி அம்மன் சிங்க வாகனத்தில் ஏறி வீதியுலா வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Share this Article