சிம்பாப்வே சென்ற இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் பரிதாப நிலை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ண தொடருக்கான தகுதிகான் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கட் அணி நேற்று (ஜூன் 10) சிம்பாப்வே சென்றிருந்தது.

எமிரேட்ஸ் விமானமான EK-649 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இலங்கை அணி வீரர்கள், துபாய் சென்று அங்கிருந்து சிம்பாப்வே சென்றுள்ளனர்.

நீண்ட நேர விமானப் பயணத்திற்குப் பிறகு தற்போது இலங்கை வீரர்கள் ஜிம்பாப்வே சென்றடைந்துள்ளதாகவும், அங்கு சென்ற வீரர்களுக்கு அறை வசதிகள் இல்லாததால் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கை வீரர்கள் தங்கும் அறை வசதிகள் இல்லாததால் விடுதி ஒன்றின் தரையில் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

எவ்வாறாயினும், இலங்கை கிரிக்கட் நிறுவனம் விரைந்து செயற்பட்டு, ஹோட்டல் நிர்வாகத்திடம் தெரிவித்ததையடுத்து, குறுகிய காலத்திற்குள் சிக்கல் முடிவுக்குகொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article