சாந்தபுரம் கிராமத்தில் புதிய பொதுநோக்கு மண்டபம்!!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சாந்தபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் பொதுநோக்கு மண்டபம் இன்று (பெப்ரவரி 7) காலை 10 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரீமோகனன், சமூக ஒத்திசைவு மற்றும் நல்லிணக்க செயற்பாடு திட்ட பிரதானி கார்த்திகேயன் மற்றும் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி அவந்தி ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்தனர்.

USAID நிறுவனத்தின் நிதி அனுசரணையில் சமூக ஒத்திசைவு மற்றும் நல்லிணக்க செயற்பாடுத் திட்டத்தின் (SCORE) கீழ் சிறகுகள் பண்பாட்டு மன்றம் ஊடாக சாந்தபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் பொதுநோக்கு மண்டபம் புனரமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்த பொதுநோக்கு மண்டபம் கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் குடும்பநல உத்தியோகத்தர் ஆகியோர் இணைந்து பணியாற்றுவதற்கு ஏதுவாக பிரத்தியேகமான அறைகளுடன் தளபாட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்தப் பகுதி மக்கள் சகல சேவைகளையும் ஓரிடத்திலேயே இலகுவாகப் பெறக்கூடியவாறு நன்மையடையவுள்ளனர்.

அலுவலக வளாகத்தில் சேவை நாடிகளுடன் வருகின்ற சிறுவர்களின் பொழுது போக்கிற்காக சிறிய விளையாட்டு முற்றமும் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மேற்கொள்ளும் வகையிலான அலுவலக தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது.

Share this Article