சமுர்த்தி சௌபாக்கிய வார நிகழ்வுகள் இடம்பெற்றது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நாடு பூராகவும் சமுர்த்தி சௌபாக்கிய வார நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றது சௌபாக்கிய வாரத்தினை முன்னிட்டு நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவிலும் சிறப்பு நிகழ்வுகள் இடம் பெற்றன.

இன்றைய தினம் சமுர்த்தி வங்கிச் சங்கத்தில் சிப்தோரா மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வழங்கல் நிகழ்வு, அருணலு கடன் வழங்கும் நிகழ்வு சமுர்த்தி வீட்டு லொத்தருக்கான காசோலை வழங்கல் போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றன.


சமுர்த்தி முகாமையாளர் திருமதி.கோ.பாமினி அவர்களது தலமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திரு.எவ்.சி.சத்தியசோதி அவர்கள், பிரதேச சபைத் தலைவர் பெரமுன கட்சியின் நெடுந்தீவு அமைப்பாளர் பொதுமக்ள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


நாளைய தினமும் தொடர்ச்சியாக சிறப்பு நிகழ்வுகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Share this Article