சட்ட விரோதமாக நாட்டுப் படகுமூலம் நெடுந்தீவுக்கு வந்தோர் இன்று நீதிமன்றில் நிறுத்தம்!!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இந்தியா- தமிழகம் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து   9 பேர் இந்திய நாட்டுப்படகு மூலம் நேற்றையதினம்  (நவம்பர் 09) மாலை சட்டவிரோதமான முறையில் நெடுந்தீவை வந்தடைந்துள்ளனர்

நெடுந்தீவு மேற்கு பனங்காணிப் பகுதியில் நாட்டுப் படகு மூலம் வந்தடைந்தவர்கள் அனைவரும் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு

அதன் பின்னர் நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில்

அனைவரும் மாவிலித்துறை பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் வீட்டில் தங்கவைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களை நெடுந்தீவு பொலிசார் பொறுப்பெடுத்துள்ளனர்.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்றையதினம் (நவம்பர் 10) ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை இவர்கள் வந்த படகு கடற்படையினரின் பாதுகாப்பில் நெடுந்தீவு பனங்காணிப் பகுதியிலேயே விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article