பாடசாலைகளை துப்பரவு செய்யும் சிரமதானப் பணிகள் தொடர்கின்றன.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பள்ளிகளை சுத்தம் செய்வோம் எண்ணங்களில் வண்ணம் செய்வோம் எனும் தொனிப்பொருளினுடாக ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பினால் நெடுந்தீவு பாடசாலைகள் சிரமாதனம் மூலம் துப்பரவு செய்யும் பணிகள் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது

அதன் தொடர்சியாக நாளை வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) நெடுந்தீவு றோ.க.கமகளிர் கல்லூரியின் சிரமாதானப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது எனவே நெடுந்தீவு இளையோர்கள் பெரியோர்கள் அனைவரையும் இணைந்து கொண்டு செயற்படுமாறு அழைக்கப்படுகின்றார்கள்

கடந்த சில நாட்களாக நெடுந்தீவின் பாடசாலைகள் கேணிகள் கிணறுகள் மற்றும் சேமக்காலைகள் அனைத்தும் சிரமாதன முறையில் இளையோர்களின் பெரும் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நாள் ஊரும் உறவும் அமைப்பின் ஊடாக ஒலிபெருக்கியூடாக மக்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு செயற்பாட்டினை மேறகொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Share this Article