கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களைபடகுகளிலேயே தடுத்து வைத்து கண்காணிப்பதற்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் உத்தரவிட்டுள்ளார்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை எதிர்வரும் 18ம் திகதி வரையில் அவர்களின் படகுகளிலேயே தடுத்து வைத்து கண்காணிப்பதற்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா அபாயம் காரணமாக நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகள் குறித்த மீனவர்களை பொறுப்பேற்பதில் மிகுந்த சிரமத்தினை எதிர்கொண்டனர். இந்நிலையில் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜுட்சனின் வாசஸ்தலத்தில் திணைக்கள அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் குறித்த மனு கையளிக்கப்பட்டது.

அதனை விசாரித்த நீதிபதி, தற்போது மீனவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள காரைநகர் கடற்படைத் தளத்தில், அவர்களது படகிலேயே எதிர்வரும் 18ம் திகதிவரையில் தடுத்து வைக்க உத்தரவிட்டார்.

Share this Article