குறிகாட்டுவானில் கனரக வாகனங்கள் பயணிக்க தற்காலிகத் தடை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

குறிகாட்டுவான் இறங்குதுறையில் கனரக வாகனங்கள் பயணிப்பது ஒரு வாரத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இறங்குதுறையின் கீழ்ப்பகுதிகள் இரும்பால் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், அவை துருப்பிடித்து வலுவிழந்துள்ளதை அடுத்தே கனரக வாகனங்கள் பயணிக்கத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபைப் பணிப்பாளர் குறூஸ் இது தொடர்பில் தெரிவித்ததாவது, இறங்குதுறையின் கீழ்ப்பகுதி வலுவிழந்துள்ளமை பாதுகாப்புத் தரப்பால் எமக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் கனரக வாகனங்கள் செல்லும்போது சக்கரங்கள் கீழிறங்கும் ஆபத்துக் காணப்படுகின்றது.

பொருள்களை இறங்குதுறைக்குக் கொண்டு செல்லும் பகுதிவரை வாகனத்தில் கொண்டு சென்று, அப்பால் மனிதவளத்தைப் பயன்படுத்தி படகில் பொருள்களை ஏற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

அடுத்தவாரம் கப்பல் கட்டுமானம் தொடர்பான விசேட குழு யாழ். வருகின்றது. அந்தக் குழுவுடன் இணைந்து இறங்குதுறை தொடர்பாக தீர்க்கமான முடிவு எட்டப்படும். அந்தக்குழு நெடுந்தாரகை மற்றும் நயினாதீவுக்கான கடற்பாதைப் படகுச் சேவை தொடர்பாகவும் ஆராயவுள்ளது – என்றார்.

Share this Article