நயினாதீவில் ஆலங்குளத்தினை அண்டிய பகுதி மற்றும் ஏனைய பகுதிகளில் மிக வேகமாக பரவிவரும் இனங்காணப்படாத தாவரம் தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டு திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையம் அறிக்கை வழங்கியுள்ளது
🔍 தாவர அடையாளம் மற்றும் வளர்ச்சித் தன்மை
1. தாவரம் அவரைக் குடும்பத்தினை சேர்ந்தது(Fabaceae)
தாவரத்தின் வகை: பல்லாண்டு புதர்ச்செடி
தாவரம் வளரும் சூழல்: வறட்சியான சூழல், அதிக காரத்தன்மை மற்றும் உவர்த்தன்மை கொண்ட நிலங்கள், மணற்பாங்கான கரையோரப் பகுதிகள்
தாவர பரம்பல்: தெற்காசிய நாடுகளிலும் இலங்கையிலும் பொதுவாகக் காணப்படும் ஒரு செடி வகை இது
2. வளர்ச்சி மற்றும் பரவும் முறை
வேகமான பரம்பல்: இத்தாவரத்தின் விதைகள் மிகச் சிறியவை.
பரவும் வழிகள்: காற்று, நீர் மற்றும் விலங்குகள் மூலம் விதைகள் எளிதாகப் பரவுகின்றன.
வளர்ச்சி இயல்பு: விவசாயப் பயன்பாட்டில் இல்லாத கைவிடப்பட்ட நிலங்களில் அடர்த்தியாகப் பரவி வளரக்கூடியது.
☘️ நன்மைகள் (மண்வள மேம்பாடு)
நைதரசன் சத்து செறிவூட்டல்:
வேர்ச் சிறுகுடுக்கள் மூலம் வளிமண்டல நைதரனை மண்ணில் நிலைநிறுத்தி மண்வளத்தை அதிகரிக்கிறது.
இயற்கை உரம்:
உதிரும் இலைகள் மற்றும் தாவரக் கழிவுகள் மண்ணின் ஊட்டச்சத்து சுழற்சியை மேம்படுத்துகின்றன.
மண் அரிப்புத் தடுப்பு:
இதன் கிளைகள் மற்றும் தாவர மூடி, மழைத்துளிகளின் நேரடித் தாக்குதலிலிருந்து மண் பரப்பைப் பாதுகாக்கின்றன.
மண் கட்டமைப்பு மேம்பாடு:
மண்ணின் சிறு திரள்களையும் துளைத்தன்மையையும் உருவாக்கி, ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவுகிறது.
ஊட்டச்சத்து மறுசுழற்சி:
ஆழமான பகுதிகளிலிருந்து ஊட்டச்சத்துகளை உறிஞ்சி மேல் மண்ணுக்குத் திரும்ப அளிக்கிறது.
⚠️ தீமைகள் & மேலாண்மை முறைகள்.
❌ தீமைகள் / பாதிப்புகள்
ஆக்கிரமிப்புத் தன்மை: கட்டுப்படுத்தாவிட்டால் அடர்ந்த புதராக வளர்ந்து, விவசாய நிலங்களையும் பிற தாவர நிலங்களையும் ஆக்கிரமிக்கக்கூடும்.
🛠️ மேலாண்மை வழிகாட்டல்
புதராக வளர விடக்கூடாது: இச்செடியை அதிகளவில் புதராக வளர விடாமல் கட்டுப்படுத்த வேண்டும்.
பசுந்தாள் உரமாகப் பயன்படுத்துதல்:
தாவர வளர்ச்சிப் பருவத்தில், பூக்கள் மற்றும் காய்கள் தோன்றுவதற்கு முன்னரே செடியைப் பிடுங்கி, மண்ணுடன் புரட்டிச் சேர்த்து உழுவதன் மூலம் பசுந்தாள் உரமாகப் பயன்படுத்தலாம்.
கட்டுப்படுத்தப்பட்ட பரம்பல்: முறையான மேலாண்மை மூலம் இதன் பரவலைக் குறைத்து, மண்வளத்தை உயர்த்தும் மாற்று வழியாகப் பயன்படுத்தலாம்.