சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி மரநடுகைச் செயற்பாடு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

 

தீவகக் கல்வி வலயத்தின் பசுமைச் சூழலை மேம்படுத்தும் நோக்கில், Green Layer சுற்றுச்சூழல் அமைப்பினால் தீவக வலயக் கல்வி அலுவலக வளாகம் மற்றும் தீவகக் கணினி வள நிலைய வளாகம் ஆகிய இடங்களில் புங்கை மரக்கன்றுகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டு நடுகை செய்யப்பட்டன.

இச்செயற்பாட்டிற்காக 40 புங்கை மரக்கன்றுகளை Green Layer சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் சசிக்குமார் அவர்கள் வழங்கி வைத்தார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமைச் சூழலை உருவாக்குதல் மற்றும் எதிர்காலத் தலைமுறையினருக்கான நிலையான சூழலைக் கட்டியெழுப்புதல் ஆகிய நோக்கங்களை முன்னிறுத்தி முன்னெடுக்கப்பட்ட இச்செயற்பாடு பாராட்டுக்குரியதாகும்.

Share this Article
Leave a comment