குமுதினி மீண்டும் பாலத்திற்கு வந்தாள்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மக்களின் கடற்போக்குவரத்தில் தன்கென தனியிடம் கொண்டு மக்கள் மனங்களில் இடம் பிடித்த குமுதினிப் படகு நேற்றைய தினம் (மே – 21) நெடுந்தீவு கரைக்கு மீண்டும் வந்து சேர்ந்தது.

பழுதடைந்த நிலையில் நீண்ட நாட்களாக குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்தில் தரித்து நின்ற மேற்படி படகு பாதுகாப்பு காரணமாக நெடுந்தீவிற்கு கொண்டு செல்லப்பட்டதாக அறிய முடிகின்றது.

கடந்தவாரம் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்த நேரத்தில் குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்தில் தரித்து நின்ற பாதைப்படகு கடலில் மூழ்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குமுதினிப்படகு பணியாளர்கள் நெடுந்தீவில் வசிப்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முகமாக நெடுந்தீவிற்கு கொண்டு செல்லப்பட்டதாக அறிய முடிகின்றது.

குமுதினிப் படகிற்கு நீர்; உட்புகும் நிலமை காணப்படுவதுடன், மிக விரைவாக அதனை திருத்தம் செய்வதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். திடிரென மழை மற்றும் காற்று ஏற்படும் சந்தர்ப்பம் ஏற்படின் குமுதினிப்டகு தாழ்வதற்கான நிலமையும் காணப்படுவதால், மிக விரைவாக திருத்தம் செய்வதற்னகான நடவடிக்கைகளை குறிப்பிட்ட திணைக்களத்தினர் நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்.

படகினைத் திருத்தம் செய்வதற்கான விலை மனுக்கோரல்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அதற்கமைவாக மிகவிரைவில் திருத்தம் செய்வதற்கு கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. திருத்த வேலைக்காக மூன்று மாதங்கள் செல்லும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குமுதினிப்படகினை சிறந்த முறையில் திருத்தம் செய்து மிகவிரைவாக வழங்கவேண்டும் என்பதே நெடுந்தீவு மக்களது கோரிக்கையாக காணப்படுகின்றது.

 

Share this Article