கிளிநொச்சியில் நடைபெறவுள்ள வேலை வாய்ப்புக்கள் மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உள்நாட்டு – வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டல் எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ளது.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த வழிகாட்டல் கிளிநொச்சி மாவட்ட செயலக வளாகத்தில் காலை 8.30 மணி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் வழிகாட்டல் ஆலோசனைகள், உள்நாட்டு வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்கள், தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி சேவைகள், உயர்கல்வி வாய்ப்புக்கள், தொழில் பயிற்சி வகுப்புக்கள், முன்றாம் நிலை தொழில் கல்வி ஆணைக்குழுவின் முன்தொழில் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு என்விகியூ சான்றிதழ் பெற்றுக்கொள்ளல் போன்ற சேவைகள் வழங்கப்படவுள்ளன.

Share this Article