கிளிநொச்சியில் இளைஞர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொலை – புத்தாண்டு தினத்தில் சம்பவம்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கிளிநொச்சி, விநாயகபுரத்தில் 26 வயது இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (ஜனவரி 1) அதிகாலை 4 மணியளவில் நடந்துள்ளது. விநாயகபுரத்தைச் சேர்ந்த 26 வயதான தவக்குமார் சுரேஸ் என்பவரே உயிரிந்துள்ளார்.

வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கினர் என்று கூறப்படுகின்றது. படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞர் உறவினர்களால் கிளிநொச்சி மாவட்ட வைத்திசாலையில் சேர்க்கப்பட்டார்.

இளைஞரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று அறிக்கையிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article