கிளிநொச்சி விவசாயிகளுக்கு தலா 10,000 ரூபா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கிளிநொச்சி விவசாயிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபா அவர்களது வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது என்று கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பா.தேவரதன் தெரிவித்துள்ளார்.

காலபோக நெற் செய்கை மேற்கொண்டுள்ள குறைந்த வருமானம் பெறும் 9, 449 விவசாயக் குடும்பங்களுக்கே இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த விவசாயிகள் 12 ஆயிரத்து 707.2 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொண்டுள்ளனர். இந்த விவசாயிகளுக்கு மொத்தமாக 127.072 மில்லியன் ரூபா நிதி வைப்பிலிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share this Article