கிளிநொச்சி மாவட்ட ரீதியான மாபெரும் கரப்பந்தாட்டப் போட்டி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கிளிநொச்சி மாவட்ட ரீதியான மாபெரும் கரப்பந்தாட்டப் போட்டி எதிர்வரும் 20,21 ஆம் திகதிகளில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட கரப்பந்தாட்ட சங்கம் கிளிநொச்சி வடக்கு மற்றும் தெற்கு வலயக்கல்வி அலுவலகத்துடன் இணைந்து 14,16,18,20 வயதுப் பிரிவு ஆண்,பெண் இருபாலருக்கும் நான்கு கோட்ட மட்ட பாடசாலைகளிற்கிடையில் போட்டிகள் நடாத்தியது.

இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் மூன்று அணிகளுக்கான மாவட்ட மட்ட மாபெரும் கரப்பந்தாட்டப் போட்டியை எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

குறிப்பு – 14 வயதுப் பிரிவு போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் பாடசாலை அணிகள் நேரடியாக பங்குபற்ற முடியும்.

Share this Article