காலி முகத்திடலில் இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்களுக்கு தடை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் காலி முகத்திடலில் செயற்பாடுகளை மட்டுப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவைப் பத்திரத்தின்படி, காலி முகத்திடலின் இயற்கை அழகுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.

காலி முகத்திடலை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கை துறைமுக அதிகாரசபை 220 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது அப்பகுதியில் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்ய 6.6 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இதன்படி, காலி முகத்திடலை பொதுமக்கள் சுதந்திரமாக நேரத்தை செலவிடுவதற்கு மாத்திரம் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Share this Article