காரைநாதம் இதழுக்கு ஆக்கங்கள் கோரல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு,காரைநகர் பிரதேச சபையினால் வெளியிடப்படவுள்ள காரைநாதம் என்னும் இதழுக்கு,கலைஞர்கள், எழுத்தாளர்கள்,மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன.

குறித்த இதழானது காரைநகர் பிரதேசத்தின் கலை, கலாசாரம்,வரலாறு, பண்பாட்டு விழுமியங்கள் மற்றும் புத்தாக்க விடயங்களைக் கொண்ட பல்துறை சார்ந்த ஆக்கங்களைத் தாங்கி புத்தாக்கமிக்க இதழாக வெளியிடப்படவுள்ளது.

இந்த இதழில் தங்கள் படைப்புக்களை பிரசுரிக்க விரும்பினால் தங்கள் ஆக்கங்களை எழுத்து மூலமாக எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு, தலைமை அலுவலகம்,காரைநகர் பிரதேச சபை,வலந்தலை என்னும் முகவரியில் ஒப்படைக்க முடியுமெனவும்,அல்லது Karainagarps@ gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article