காரைநகர், சங்கானை, சண்டிலிப்பாய் இளைஞர்களுக்கான தொழில்சந்தை இன்று

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மனிதவள வேலைவாய்ப்புத் திணைக்களம் மற்றும் சங்கானை, சண்டிலிப்பாய், காரைநகர் பிரதேச செயலகங்களின் இணை ஏற்பாட்டில் மாபெரும் தொழில்சந்தை நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் சங்கானை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கு பொருத்தமான வேலைவாய்ப்புகளை அறிமுகப்படுத்துவதையும், தொழிற்பயிற்சி மற்றும் தொழில்வாய்ப்பு தொடர்பான வழிகாட்டல்களை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

காரைநகர், சங்கானை மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த வேலைவாய்ப்பை எதிர்நோக்கும் இளைஞர், யுவதிகள் இதில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு 0771508299, 0776155867 மற்றும் 0778286081 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this Article
Leave a comment