காரைநகரில் முன்பள்ளி மாணவர்களுக்கு இணைய வசதி தொடர்பான விழிப்புணர்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காரைநகர் பிரதேச சபையின் வடக்கு, தெற்கு உப அலுவலகங்களில் உள்ள நூலகங்களில் இலவச இணையத்தள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்கால தகவல் தொடர்பாடல் வளர்ச்சியில் இணைய வசதி முக்கியம் பெறுவதால் இணையம் மூலம் மாணர்கள் தகவல்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில்
கற்றலுக்கான இலவச நூலகச் செயற்பாடு மிக பயனுள்ளதாக அமைகின்றது.

இவ் இணைய வசதி தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக முன்பள்ளி மாணவர்கள் நூலகத்திற்கு வருகை தந்து இணையத்தினைப் பயன்படுத்தி சிறுவர் நிகழ்ச்சிகளை பார்த்து மகிழ்ச்சியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று (ஓகஸ்ட் 31) திருச்செந்தூர் முன்பள்ளி சிறார்கள் நூலகத்தினை பார்வையிட்டு மகிழ்ந்துள்ளனர்.

Share this Article