காரைநகரில் நடைபெறவுள்ள கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காரைநகர் பிரதேச சபையின் உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு நடாத்திய கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம் இன்று(நவம்பர் 22) மாலை 3.00 மணிக்கு கலாநிதி விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டிக்கு காரைநகர் பிரதேச சபை செயலாளர் திரு.கி.விஜயேஸ்வரன் தலைமை தாங்கவுள்ளார்.

அம்பாள் சனசமூக நிலையம் எதிர் ஸ்ரீ முருகன் சனசமூக நிலையம் அணிகள் இந்த இறுதியாட்டத்தில் மோதவுள்ளன.

நிகழ்வில் சனசமூக அமைப்புக்கள், விளையாட்டுக்கழக பிரதிநிதிகள், சமூகமட்ட அமைப்புக்கள் மற்றும் ஆர்வலர்கள், அபிமானிகள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு காரைநகர் பிரதேச சபை அழைப்புவிடுத்துள்ளது.

Share this Article