காரைநகரில் திருட்டில் ஈடுபட்ட கும்பல் பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைநகர்  கோவளம் பகுதியில் நேற்று (மார்ச் 17) மாலை திருட்டில் ஈடுபட்ட ஐவர் அடங்கிய கும்பல் ஒன்று அப்பகுதி  மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
காரைநகர் கோவளப் பகுதியிலுள்ள வீடுகளின் நிலைகளை  திருடிய சந்தர்ப்பத்தில் அப் பகுதி மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
காரைநகர் மணற்காடு அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்துக்கு கோவளப்பகுதி மக்கள் சென்றிருந்த நிலையில் குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிடிக்கப்பட்டவர்களில்   ஒருவர் காரைநகர்  பகுதியை சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Share this Article