காரைநகரில் கைப்பற்றப்பட்ட 65 கிலோ கஞ்சா பொதிகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காரைநகர் பகுதியிலிருந்து 65 கிலோ எடையுடைய கஞ்சா பொதிகள் இன்று (மே 21) இராணுவத்தினால் மீட்கப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைநகர்ப் பகுதியில் கடற்கரை அருகே காட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகளே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்தக் கஞ்சாப் பொதிகள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் அது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Share this Article