கல்வி அதிகாரி விபத்தில் பலி ;கைதடியில் துயரம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தென்மராட்சிக் கல்வி வலய தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரியும்மட்டுவில் வடக்கை சொந்த இடமாகவும் கோண்டாவில் பகுதியில் வாழ்ந்து வரும்கணபதிப்பிள்ளை ஈஸ்வரன் (வயது 56) விபத்தில் உயிரிழந்துள்ளார் .

கைதடி கோப்பாய் வெளியில் நேற்று முன்தினம் 11.04.2024 வியாழன்பாடசாலை விளையாட்டு போட்டி ஒன்றில் கலந்து கொள்ள மோட்டார்சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தடிப்பர் வாகனம் மோதி விபத்து இடம்பெற்றதில் படுகாயமடைந்து யாழ் போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .

உடலம் உடற்கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில்வைக்கப்பட்டு பின்னர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

இந்து நாகரிகம் தமிழ் பாடங்களை உயர்தர மாணவர்களுக்கு கற்பிப்பதில்சிறந்தவராக விளங்கினார்.

இவரின் தீடிர் இழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Article