கப்பல் கழிவுப்பொருட்கள் கரையொதுஙகும் பட்சத்தில் தகவல் வழங்க பணிப்பு

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

அண்மையில் கொழும்பு கடலில் தீ விபத்துக்குள்ளாகிய கப்பல் கழிவுப் பொருட்கள் இலங்கையின் பல பாகங்களிலும் கரையொதுங்கும் தன்மை காணப்படுவதுடன், சில கடல் வாழ் உயிரினங்களும் இறந்த நிலையில் கரையொதுங்கும் நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றது.

அந்தவகையில் நெடுந்தீவின் கரையோரங்களில் கப்பல் கழிவுப் பொருட்கள் கரையொதுங்கும் பட்சத்தில் அது தொடர்பான தகவல்களினை உடனடியாக நெடுந்தீவு கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத்திற்கு தகவல் வழங்குமாறு கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் திரு.பா.லீலியான் குருஸ் அவர்கள் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார்.

Share this Article