கட்டுப்பணம் செலுத்தும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப் பணத்தை வைப்பிலிடுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று (ஜனவரி 20) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது.

பல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ள நிலையில், உள்ளூராட்சிச் சபை தேர்தல் தொடர்பான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை, கட்டுப்பணத்தை வைப்பிலிட்ட நாள் முதல் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் சுமார் 15 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

அரச அதிகாரத்தை பயன்படுத்தியமை தொடர்பில் கணிசமான எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் இதுவரை கிடைத்துள்ளன என்று பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

Share this Article