கஞ்சா வைத்திருந்தவர் கிளிநொச்சியில் கைது!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி, ஆறுமுகம் வீதியில் கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவரிடம் இருந்து 7 கிலோ 800 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது என்று சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

சிறப்பு அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் வழிமறிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கிளிநொச்சி பொலிஸாரிடம் இன்று (பெப்ரவரி 7) ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், கஞ்சாவும், அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளன.

Share this Article