கசூரினா கடற்கரையில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் 6 பேருக்கு விளக்கமறியல்

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் 6 புலம்பெயர் தமிழர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் இருந்த நான்கு பெண்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து வவுனியா வந்தவர்கள் யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரைக்கு சென்று பொழுதை கழித்துள்ளனர். அவர்களில் ஒருவரின் மோதிரத்தை காணவில்லை என கடற்கரையில் கடமையில் இருந்த உயிர்காப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டு, அவர்களுடன் முரண்பட்டுள்ளனர்.

அது தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, கடற்கரைக்கு விரைந்த பொலிஸார் 6 ஆண்கள், 4 பெண்களைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், 4 பெண்களைப் பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்று 6 ஆண்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் ஐந்து பேர் கனேடிய பிரஜைகள் எனவும் , ஒருவர் லண்டன் பிரஜை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share this Article