க.பொ.த சாதாரணதரப் பரீட்சை தொடர்பில் அரசின் திடீர் அறிவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள தினத்தில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது.

அத்தோடு உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இனியும் தாமதிக்கப்படாமல் விரைவில் ஆரம்பமாகும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று (ஏப்ரல் 25) செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை திட்டமிட்ட படி மே மாதம் 29 ஆம் திகதி நிச்சயம் இடம்பெறுமென கல்வி அமைச்சர் அமைச்சரவையில் தெரிவித்தார்.

Share this Article