ஓராண்டு நினைவு தின நிகழ்வு இடம் பெற்றது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் முன்னாள் தலைவர் அமரர் போகா பராராஜசிங்கம் அவர்களின் ஒராண்டு நினைவு தின நிகழ்வு இன்று இடம் பெற்றது.

அமரர் சின்னத்துரை பரராஜசிங்கம் ஐயாவின் ஓராண்டு நினைவு தினத்தை ஒட்டி அவர்களின் குடும்பத்தினர் (கனடா),ஆலையடிவேம்பு நாவற்காடு கிராமத்தில் உள்ள குடும்பம் ஒன்றிற்கு 70000 ரூபாய் செலவில் பசுவளர்ப்பு வாழ்வாதாரத்தினை மேற்கொண்டிருந்தனர்.
அத்துடன் சித்தாண்டி யோகர் சுவாமிகள் மகளீர் இல்லத்தில் விசேட மதிய ஆகார ஏற்பாடும், நெடுந்தீவு மேற்கு உயரப்புலம் ஐயனார் ஆலயத்தில் ஆத்ம சாந்தி பூஜையினையும் மேற்கொண்டு இருந்தனர்.
நெடுந்தீவு மீது பெரும் பற்றுக் கொண்ட அமரர் போ.பராஜசிங்கம் அவர்கள் நெடுந்தீவில் வாழ்ந்த காலத்திலும் குறிப்பாக புலம் பெயர்ந்து வாழ்ந்த போதும் நெடுந்தீவு மேல் அதித பற்றுக்கொண்டு செயற்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பில் இணைந்து சங்கத்தின் வளர்ச்சிக்கும் தீவகத்தின் வளர்ச்சிக்கும் தன்னாலான பங்களிப்புக்களை ஆற்றியதுடன் ஒன்றியத்தின் வெள்ளி விழா நிகழ்வினை சிறப்புடன் தலைமையேற்று செயற்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Share this Article