எல்.பி.எல் ஏலம்!- அதிக விலைக்கு வாங்கப்பட்ட மதுசங்க!

Anarkali
Anarkali  - Senior Editor
3 Min Read

கொழும்பில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் (LPL) வீரர்கள் ஏலத்தில் இலங்கை அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர் டில்ஷான் மதுசங்க அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டார்.

டில்ஷான் மதுசங்க ஆரம்பக்கட்ட ஏலத்தில் அணி உரிமையாளர்களின் கவளத்தை ஈர்க்காத போதும், இறுதியாக தெரிவுசெய்யப்பட்ட வீரர்களுக்கான வாசிப்பின் போது 92 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு (இலங்கை ரூபாயில் சுமார் 2 கோடி 94 இலட்சம்) ஜப்னா கிங்ஸ் அணியால் வாங்கப்பட் டார்.

கொழும்பு சங்ரி-லா நட்சத்திர ஹோட் டலில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற இந்த LPL வீரர்கள் எலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என ஒட்டுமொத்தமாக 360 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இதிலிருந்து 20 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 75 உள்நாட்டு வீரர்கள் என அணிகளுக்காக வாங்கப்பட்டனர். வெளிநாட்டு வீரர்களை பொறுத்தவரை அவுஸ்திரேலியாவின் முன்னணி வீரர்களான கிரிஸ்லின் (ஜப்னா கிங்ஸ்), பென்கட்டிங் (கோல் டைட் டன்ஸ்) ஆகியோர் வாங்கப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தான் அணியின் வஹாப்ரியாஸ் (கொழும்பு ஸ்ரைக்கர்ஸ்), இப்திகார் அஹமட் (கொ ழும்பு ஸ்ரைக்கர்ஸ்), மொஹமட் நவாஸ் (கொழும்பு ஸ்ரைக் கர்ஸ்), ஆசிப்அலி (பி-லவ் கண்டி) மற் (ஜப்னா கிங்ஸ்) போன்ற முன்னணி வீரர்கள் வாங்கப்பட் டுள்ளனர்.

TNYDXGற்றும் சொஹைப் மலிக் இவர்களுடன் நியூ சிலாந்து அணியின் டிம் செய்பர்ட் (கோல் டைட்டன்ஸ்), செட் போவ்ஸ் (கோல் டைட்டன்ஸ்), ஆப்கானிஸ்தான் அணியின் நூர் அஹ மட் (தம்புள்ள ஓரா), தென்னாபிரிக்க அணியின் ஹார்டஸ் வில்ஜியோன் உள்நாட்டு வீரர்களை பொறுத்த வரை டில்ஷான் மதுசங்கவுக்கு அடுத் தப்படியாக இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் சரித் அசலங்கவை 80,000 அமெரிக்க டொலர்களுக்கு ஜப்னா கிங்ஸ் அணி வாங்கியதுடன், தனன்ஜய டி சில்வா 76,000 அமெரிக்க டொலர் (தம்புள்ள ஓரா), பினூ பெர்னாண்டோ 76,000 அமெ ரிக்க டொலர் (தம்புள்ள ஓரா) மற்றும் தினேஷ் சந்திமால் 72,000 அமெ ரிக்க டொலர் (பி-லவ் கண்டி) என அதிக தொகைக்கு வாங்கப்பட்டனர்.

இந்த வீரர்களுடன் இலங்கை கிரிக் கெட் அணியில் இடத்தை பிடிப்பதற்காக காத்திருக்கும் மற்றும் சில வாய்ப்புகளை பெற்றுக்கொண்ட உள் ளூர் வீரர்களுக்குமான கவனம் இந்த ஏலத்தை பொறுத்தவரை அதிகமாக குறிப்பாக தற்போது உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான இலங்கை அணியில் இணைக்கப்பட்டுள்ள சதீர சமரவிக்ரமவை 68,000 அமெரிக்க டொலர்களுக்கு தம்புள்ள ஓரா அணி வாங்கியிருந்தது.

இவருடன் கமிந்து மெண்டிஸ் 68,000 அமெரிக்க டொலர் (பி-லவ் கண்டி). துனித் வெல்லாலகே 56,000 அமெரிக்க டொலர் (ஜப்னா கிங்ஸ்). லஹிரு சமரகோன் 40,000 அமெரிக்க டொலர் (கோல் டைட்டன்ஸ்) மற்றும் அஷேன் பண்டார் 40,000 அமெரிக்க டொலர் (பி-லவ் கண்டி) என வளர்ந்துவரும் வீரர்களுக்கும் அதிக தொகை வழங்கப்பட்டிருந்தது.

தமிழ்பேசும் வீரர்களை பொறுத்தவரை கடந்த ஆண்டு LPL தொடரில் வளர்ந்துவரும் வீரருக்கான விருதை பெற்றிருந்த விஜயகாந்த வியாஸ் காந்த்தை 18,000 அமெரிக்க டொலர்களுக்கு ஜப்னா கிங்ஸ் அணி மீண்டும் வாங்கியிருந்ததுடன், தீசன் விதுசன மற்றும் ரத்னராஜா தேனுரதன் ஆகியோரை ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 5000 அமெரிக்க டொலர்களுக்கு ஜப்னா கிங்ஸ் அணி வாங்கியது. அதே நேரம் கடந்த ஆண்டு LPL தொடரில் வாய்ப்பை பெற்றுக்கொள்ளாத வேகப் பந்துவீச்சாளர் மொஹமட் சிராஸ் இம் முறை 5000 அமெரிக்க டொலாக ளுக்கு கோல் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

மேற்குறிப்பிட்ட வீரர்களை தவிர்த்து இலங்கை அணியின் முன்னணி வீரர் களான பெதும் நிஸ்ஸங்க (கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் – 40,000), நிரோஷன் டிக்வெல்ல (கொழும்பு ஸ்டார்ஸ் 40,000), லஹிரு குமார (கோல் டைட்டன்ஸ் – 40,000), கசுன் ராஜித (கோல்டைட்டன்ஸ் – 40,000), துஷ் மந்த சமீர (பி-லவ் கண்டி-70,000) மற்றும் பிரமோத் மதுஷான் (தம்புள்ள ஓரா – 34,000) ஆகியோரும் அணி களால் வாங்கப்பட்டிருந்தனர்.

முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட LPL ஏலம் நிறைவுபெற்றுள்ள நிலையில், தொடர் அடுத்த மாதம் 30 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என்பது குறிப் பிடத்தக்கது.

Share this Article